fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

இப்போ தான் சீரியல் சூடு பிடிக்கிறது.. கோபியின் மனைவியாக பாக்யாவை எதிர்கொண்ட ராதிகா!

rathika-bhakiya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இப்போ தான் சீரியல் சூடு பிடிக்கிறது.. கோபியின் மனைவியாக பாக்யாவை எதிர்கொண்ட ராதிகா!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை ராதிகாவிடம் குடிபோதையில் செல்போனில் இருக்கும் புகைப்படத்தை ஆதாரமாகக் காட்டி ஒட்டுமொத்த உண்மையையும் கோபி அவிழ்த்து விட்டான். இதனால் நொறுங்கிப் போன ராதிகா என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் நிலைகுலைந்து நிற்கிறாள்.

ஏனென்றால் பாக்யாவை பற்றி முழுவதும் தெரிந்த ராதிகா, கோபி இவ்வளவு நாள், ‘தன்னுடைய மனைவி தப்பானவள், பண ஆசை பிடித்தவள், அவளுக்கு பணம் தான் எல்லாம்’ என பொய் சொல்லி தன்னிடம் நாடகமாடி இருக்கிறான் என்பது ராதிகாவிற்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆகையால் கோபிதான் தப்பானவன் என அவனை உதறிய ராதிகா, மன அமைதிக்காக கோயிலுக்கு செல்கிறாள்.

அங்கு பாக்யாவை எதிர்பாராதவிதமாக சந்தித்த ராதிகா,’ ராஜேஷை தொடர்ந்து மீண்டும் நான் தவறான நபரை தேர்ந்தெடுத்து விட்டேன்’ என அழுது புலம்பி பாக்யாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் கூனிக்குறுகுகிறாள். இருப்பினும் கோபி தான் ராதிகா சொல்லும் நபர் என்பதை புரிந்து கொள்ளாத பாக்யா, அவளுடைய நல்ல மனதிற்கு ஏற்றவாறு ராதிகாவிற்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி அந்த உறவில் இருந்து வெளியேவர பாருங்கள் என்று தெம்பூட்டுகிறாள்.

இதன் பிறகு வீட்டிற்கு செல்லும் ராதிகாவை கோபி விடாமல் நச்சரித்து தன் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிய வைக்க முயற்சிப்பான். தன்னுடைய அப்பாவின் வற்புறுத்தலின் பெயரிலேயே,  பாக்யாவை சிறுவயதில் அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் திருமணம் செய்து கொண்டு, அதன்பிறகு குடும்பம் குழந்தைகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து கொண்டதாக முதலைக் கண்ணீர் வடித்து ராதிகாவை வசியம் செய்ய பார்ப்பான்.

ஏற்கனவே தன்னுடைய முதல் திருமண வாழ்க்கையில் இறந்த சந்தோசத்தை கோபி மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று மீண்டும் சபலப்பட்டு கோபி சொல்வதையெல்லாம் ஏற்று, அவனுடைய விவாகரத்துக்குப் பிறகு ராதிகா மீண்டும் கோபியை திருமணம் செய்து கொள்ள மெல்ல மெல்ல தயாராகவாள்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப கோபி எல்லா உண்மையையும் தன் வாயாலேயே ராதிகாவிற்கு சொன்னாலும் எந்த சூழ்நிலையிலும் ராதிகாவை விட்டு பிரிய கூடாது என்பதில் மட்டும் தெளிவாக திட்டமிட்டு செயல்படுகிறான்.

Continue Reading
To Top