வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இனியா போடும் டிராமாவில் பலியாடாக சிக்கிய ராதிகா.. பாக்யாவை பழிவாங்க கோபிக்கு கிடைக்கும் துருப்புச் சீட்டு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா வீட்டிற்கு கோபியை பார்த்து பேச வந்த இனியாவிடம் ராதிகாவின் அம்மா ஓவராக பேசியதால் பதிலடி கொடுக்கும் விதமாக இனியா மற்றும் ஜெனி இருவரும் சேர்ந்து ராதிகா வந்த பிறகு தான் குடும்பத்தில் சந்தோஷமே இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்து விட்டார்கள். இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியாகி அவமானப்பட்டு ராதிகா எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிட்டார்.

ஆனால் ராதிகாவின் அம்மா இதுதான் சான்ஸ் என்று என்னெல்லாம் பேசுது குட்டிச்சாத்தான், பேசினதுக்கு பளார் என்று கன்னத்திலே அடித்து வெளியே அனுப்பி இருக்கணும். கோபியை கல்யாணம் பண்ண பிறகு உன் வாழ்க்கையில் தான் சந்தோஷமே இல்லாமல் போய்விட்டது. ஆனால் என்னமோ நீ வந்த பிறகுதான் குடும்பமே பிரிந்தது போல ஓவராக பேசுறாங்க என்று கமலா கோவப்பட்டு ராதிகாவிடம் புலம்புகிறார்.

ஆனால் ராதிகா எதுவும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார். பிறகு வீட்டிற்கு வந்த கோபியிடம் இனியா வந்து ராதிகாவை திட்டி விட்டுப் போனதை கமலா சொல்கிறார். ஆனால் கோபி என் பொண்ணு இந்த மாதிரி எல்லாம் பேச மாட்டாளே, அவளுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியாது என்று இனியாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கோபி பேசுகிறார்.

இதையெல்லாம் கேட்டு ராதிகா, இப்பொழுது கூட உங்கள் பொண்ணு மீது தான் நம்பிக்கை வைக்கிறீங்க. என்னை பற்றி கவலைப்படவில்லை என்பதற்கு ஏற்ப பீல் பண்ணுவது போல் தெரிகிறது. ஆனாலும் கோபி நான் என் பொண்ணை பார்த்து பேசி விட்டு வருகிறேன் என்று பாக்யா வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் ஈஸ்வரிடம் நான் என் மகளை கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லி இனியாவை காரில் கூட்டிட்டு போகிறார்.

போனதும் இனியாவிடம் என்ன ஆச்சு ஏன் டல்லா இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு இனியா அழுது கொண்டே ஒரு ட்ராமாவை போட ஆரம்பித்து விட்டார். உங்களால் நான் அம்மாவை ரொம்பவே திட்டி விட்டேன், எனக்கு கஷ்டமா இருக்கிறது. அதற்குத்தான் உங்களை பார்த்து பேசுவதற்கு உங்க வீட்டிற்கு வந்தேன் என்று சொல்கிறார்.

உடனே கோபி என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். நீங்கள் வீட்டு வாசலில் வந்து சண்டை போட்டதும் அம்மா அதற்கு பதில் பேசுவதும் வீடியோ மூலம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. எனக்கு அவமானமாக இருக்கிறது, காலேஜுக்கு என்னால் போக முடியவில்லை. என்னுடன் படிக்கிறவங்க தெரிஞ்சவங்க தெரியாதவங்க கூட என்னை பார்த்து கிண்டல் அடிக்கிறாங்க.

எனக்கு ரொம்ப அவமானமாக இருக்கிறது என்னைப் பற்றி யாருமே யோசிக்கவில்லை என்று ஃபில் பண்ணி அழுகிறார். இதெல்லாம் கேட்ட கோபி, இனியாவை சமாதானம் படுத்தும் விதமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகா தான் பாவம், ராதிகா வந்த பிறகு பாக்கியா வாழ்க்கையில் குளறுபடிகள் நடந்திருந்தாலும் கோபி செய்த தில்லாலங்கடி வேலைக்கு ராதிகாவும் பொறுப்பாகிவிட்டார்.

அதனால் மொத்த பிரச்சனைக்கும் ராதிகா தான் காரணம் என்பதற்கு ஏற்ப இனியா, ராதிகாவை பலியாடாகி வைத்துப் பேசி விட்டார். அடுத்ததாக பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் கோபிக்கு ஒரு துருப்பு சீட்டை கையில் வைத்திருக்கிறார். கோபியை எப்படியும் ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று நினைக்கும் பாக்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்யா நடத்தும் ஹோட்டல் கோபியின் நெருங்கிய நண்பருடையது.

அதனால் அவர் மூலம் அந்த ஹோட்டலை அபகரிக்க கோபி பிளான் பண்ண போகிறார். இதிலிருந்து மறுபடியும் பாக்யா எப்படி மீண்டு வருவார் என்பதை காட்டும் விதமாக இன்னும் சில மாதங்கள் இந்த நாடகங்கள் தொடர்ச்சியாக போய்க்கொண்டிருக்கும்.

- Advertisement -

Trending News