1979ல் ராதிகா தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். ஒரு ஹீரோயினுக்கான எந்த அம்சங்களும் இல்லாமல் நடிக்க வந்த முதல் பெண்.

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்  பாரதிராஜாவால் அறிமுகம் ஆனார். பாரதிராஜாவின் இரண்டாவது படம். முதல்படம் பதினாறு வயதினிலே வெள்ளிவிழா  கொண்டாடிய அதிர்வுகள் விலகாத நிலையில் கிழக்கே போகும் ரயில் வந்து பட்டையைக் கிளப்பியது.

அப்போது ஆரம்பித்த ராதிகாவின் உழைப்பு இதோ இன்றுவரை சளைக்காமல் ஓடிகொண்டே  இருக்கிறார். தமிழ்,தெலுங்கு கன்னடம் மலையாளம் என ஓடி ஓடி நடித்தார். இவருடன் ஜோடி போடாத சூப்பர்ஸ்டார்களே இல்லை.

அதன் பின் சின்னத்திரையில் சித்தி தொடர் மூலம் கால் பதித்தார். அதிலும் மலைக்க வைக்கும் சாதனைகள். இப்படி கடும் உழைப்பில் சொந்தமாக ராடன் மீடியா, ராடன் பிக்சர் உள்ளிட்ட  நிறுவனங்களைத் துவங்கி பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்.

சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள், கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இதுவரை சம்பாதித்த எல்லாம் பறி  போய் விட்டது, கணவர் சரத்குமாரின் அரசியல் பேரங்கள், பேராசைகளே இதற்குக் காரணம் என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவித்துள்ளாராம் ராதிகா.

பேரம் படியாத அரசியல் புள்ளிகள்  சரத்குமார் பற்றி டெல்லிக்கு  போட்டுக் கொடுக்க வருமானவரித்துறை ரெய்டு செய்து மொத்தமாக அள்ளிக்கொண்டு போய் விட்டார்கள். இதனால் துவங்கிய படம் பாதியிலேயே நின்று விட்டது. சீரியல் ஷூட்டிங் தாமதமாகிறது என்று கூறப்படுகிறது.

ராதிகா ஒரு இரும்புப் பெண்மணி..விரைவில் எழுந்து வருவார். வாங்க மேடம்..!