திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

ஆசையை எல்லாம் குழி தோண்டி புதைத்த ராதிகா.. நடுரோட்டில் சர்க்கஸ் காட்டும் புது மாப்பிள்ளை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை வெறுப்பேற்றுவதற்காகவே கோபி தன்னுடைய இரண்டாவது மனைவியுடன் எதிர் வீட்டிலேயே குடி வந்திருக்கிறார். இப்படி கோபி நடந்து கொள்வதால் பாக்யா குடும்பமே கொலைவெறியானது.

ஆனால் அவர்களை எல்லாம் பாக்யா சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார். புது மாப்பிள்ளையான கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்ய துடிக்கும் போது அதற்கு நந்தியாக அவருடைய மகள் வந்து விடுகிறார். ஒரு வழியாக மகள் தூங்கிவிட்டார் என ராதிகாவிடம் நெருங்கும் கோபியை பக்கத்தில் படுத்திருந்த ராதிகாவின் மகள் மயூ நெஞ்சிலே உதை விடுகிறார்.

Also Read: கோபி அங்கிள் உங்க நிலைமையை பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கு.. பொண்டாட்டி அருமை புரியுதா?

அதன் பிறகு ராதிகாவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதால் கோபியை தரையில் படுக்கச் சொல்லிவிடுகிறார். இப்படி இரண்டாவது திருமணத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகும் கோபி, ‘இதற்காக தான் குடும்பத்தை எதிர்த்தோமா’ என்றும் புலம்புகிறார்.

அதுமட்டுமின்றி வகை வகையாக பாக்யா சமைத்துக் கொடுத்ததை சாப்பிட்ட கோபிக்கு, ராதிகா ஓட்ஸ்சை மட்டுமே இரவு உணவுக்கு கொடுத்து படாத பாடு படுத்துகிறார். ஆனால் இதையெல்லாம் வெளியில் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டும் கோபி, தினமும் வாக்கிங் செல்லும் போது தன்னுடைய அப்பா மற்றும் மகன்களை சீண்டி பார்க்கிறார்.

Also Read: கத்தியை கையில் எடுத்த மகன்.. ராதிகா 3வது புருஷன் தேட நேரம் வந்துடுச்சு

தற்போது எழிலை குறி வைத்த கோபி வாக்கிங் செல்லும் போது அவரிடம் வம்பு பண்ணுகிறார். கோபி எழிலை போட்டிக்கு வர சொல்லி பந்தயம் கட்டுகிறார். இள இரத்தத்தில் எழில் வேகமாக ஓட, கோபி அவரை முந்த வேண்டும் என தன்னுடைய வயது மறந்து வேகமாக ஓடியதால் மூச்சு வாங்குகிறார்.

அதன் பிறகு எழில் கோபத்தில் இனி நீ எதிலும் ஜெயிக்க முடியாது என்று அப்பாவை கழுவி கழுவி ஊற்றி விட்டு கிளம்புகிறார். இப்படி பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அழுச்சாட்டியதற்கு அளவில்லாமல் போவதுடன், இந்த சீரியல் தற்போது நகைச்சுவை நாடகமாகவே மாறிவிட்டது.

Also Read: இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

Advertisement Amazon Prime Banner

Trending News