தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. நடித்த ஒரு சில படங்களிலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கபாலி படத்தில் நடித்த இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ரஜினி சாருடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம், அவர் மிகவும் எளிமையானவர்.மேலும், இந்த படம் வழக்கமான ரஜினி படம் போல் இருக்காது, மசாலா காட்சிகள் பெரிதும் இருக்க வாய்ப்பில்லை.

அதிகம் படித்தவை:  உலக அளவில் கபாலி வசூல் இத்தனை கோடியா? புதிய வரலாறு படைத்த ரஜினிகாந்த்

இதில் வேறு ஒரு தளத்தில் சூப்பர் ஸ்டாரை நீங்கள் பார்ப்பீர்கள், மிகவும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் படத்தில் உள்ளது, அதில் ரஜினி சார் கலக்கியுள்ளார்’ என ஒரு ஆங்கில நாளிதழில் கூறியுள்ளார்.