Tamil Cinema News | சினிமா செய்திகள்
எதற்காக ஆபாச படங்களில் நடித்தேன்… ஷாக் கொடுத்த ராதிகா ஆப்தே

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த ராதிகா ஆப்தே தான் ஆபாச படங்களில் நடித்ததற்கு பணத் தேவையே காரணம் எனக் தெரிவித்து இருக்கிறார்.
பாலிவுட்டில் சின்ன கதாபாத்திரம் மூலம் எண்ட்ரி கொடுத்தவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் தொடர்ச்சியான வாய்ப்புகள் அவருக்கு வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மராத்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆகிய மொழி படங்களில் பிஸியாகி இருக்கிறார். சமீபத்தில், கோலிவுட்டில் ரஜினிகாந்துடன் இவர் நடிப்பில் வெளியாகிய கபாலி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ராதிகா ஆப்தே பலருக்கு பேவரிட்டாக மாறினார்.
தென்னிந்திய நடிகர் ஒருவர் காலை உரசி பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் இதுவரை அவர் பிரகாஷ் ராஜ், கார்த்தி சிவக்குமார், ரஜினிகாந்த் ஆகிய மூன்று முக்கிய நடிகர்களுடன் மட்டுமே நடித்து இருக்கிறார். யாராக இருக்கும் என பலரும் மண்டையை போட்டு பிய்த்து கொண்டனர். இவரும் அடிக்கடி தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க அடிப்பதில் வெகு கில்லாடியாக இருப்பவர். தற்போது, நல்ல வேடத்தை தேர்வு செய்து நடித்து வரும் ராதிகா ஆப்தே அறிமுகமான சமயத்தில் ஆபாச படங்களிலே அதிகமாக நடித்தார்.
இதுகுறித்து, முதல்முறையாக மனம் திறந்து இருக்கிறார். அவர் கூறுகையில், “நல்ல பேக் கிரவுண்டுடன் திரைத்துறையில் எண்ட்ரி கொடுப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. அப்படி இல்லாமல் வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் நடிகையாக அறிமுகமானேன். நிறைய கஷ்டங்களை சந்தித்தேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
நடிகையான போது எதை எல்லாம் செய்யக்கூடாது என நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் வரும் பணம் என் வாழ்வாதாரத்திற்கு உதவியது. அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
