fbpx
Connect with us

Cinemapettai

என்னை தமிழன் எனக்கூறுவதெல்லாம் வேஸ்ட், நான் ஒரு தெலுங்கன்.. ராதாரவி

Politics | அரசியல்

என்னை தமிழன் எனக்கூறுவதெல்லாம் வேஸ்ட், நான் ஒரு தெலுங்கன்.. ராதாரவி

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சியடைந்திருக்க வாய்ப்பே இல்லை என நடிகரும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான ராதா ரவி கூறினார்.

எம்.ஆர்.ராதாரவியின் 40-வது ஆண்டு நினைவு தினத்தில் ராதாரவி கூறுகையில், “தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு அளப்பறியது, தம்மை தமிழன் எனக்கூறுவதெல்லாம் வேஸ்ட், நான் ஒரு  தெலுங்கன்.

திராவிட இயக்க வளர்சிக்காக பாடுபட்ட தனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்களில் இப்போது இருப்பவர் மறந்துவிட்டனர். எனது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுக்கிறார்கள். திராவிட தெலுங்கர்கள் ஒருங்கிணைந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அங்கீகாரம் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் போது தான் நடக்குமே தவிர, யார் தலைகீழாக நின்றாலும் முன்கூட்டியே நடைபெற வாய்ப்பில்லை என ஸ்டாலினை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மிகவும் நல்லவர். எல்லோருக்கும் பொதுவானவர். எடப்பாடி பழனிசாமி ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top