Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவை கொச்சையாக பேசிய ராதாரவி… கழுவி ஊத்திய விக்னேஷ் சிவன்…
நயன்தாரா தனது முழு சினிமா வாழ்க்கைக்காக பல போராட்டங்களை சந்தித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். அவர் சினிமாவில் தனக்கென்று நிகரில்லா ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
நேற்று ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாராவை தரக்குறைவாகவும், ஆபசமாகவும் பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இது இவர் வாடிக்கையாக செய்து வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை கிளப்பியுள்ளது.
சர்ச்சைப் பேச்சு – பார்த்ததும் கும்பிடுற மாதிரி இருக்கிற பெண்களை வைத்து சாமி படங்களில் நடிக்க வைத்த காலம் போய் இன்று பார்த்ததும் கூப்பிடுற மாதிரி இருக்கிற பெண்களை வைத்து எடுக்கிறார்கள்.
நயன்தாராவை பொருத்தவரை தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். இதற்காக மட்டும் தான் தற்போது ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
ஆனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் ராதாரவி இதுபோன்று சர்ச்சையாக பேசி தன்னை மீண்டும் பிரபலப்படுத்திக் கொள்கிறார். இதுபோன்ற செயல் சினிமா பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன் தந்தை எம்.ஆர்.ராதாவை இம்மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய போது இல்லாத கோபம் இன்று நயன்தாராவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் போது ராதாரவிக்கு வரும் கோபம் நியாயமானது அல்ல என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்
இது குறித்து விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ராதாரவியை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் நிறைவு பெறாத ஒரு படத்திற்கு இப்படி ஒரு விழாவை நடத்தி அதில் படத்தின் கதாநாயகியை தரக்குறைவாக பேசி தனக்கு சுயவிளம்பரம் செய்து கொள்வது சரியானதல்ல என்ற பாணியில் அவர் தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதனைப் போன்ற கீழ்த்தனமாக பேசியதற்கு மக்கள் கைதட்டுவது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் இப்படி ஒரு சினிமா பின்புலம் உள்ள ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது அருவருக்கத்தக்கது என்றும் அவர் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
Then it’s good to stay away from such events which don’t have any need but jus to give opportunities like this for jobless people to vomit ? some senseless , useless stuff on stage !
Anyways no one from Nadigar sangam or any sangam will take any action against him #Sad #state— Vignesh Shivan (@VigneshShivN) March 24, 2019
Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless !
Sad to see audience laughing& clapping for his filthy comments!
None of us— Vignesh Shivan (@VigneshShivN) March 24, 2019

vignesh-shivan
