நடிகர் ராதாரவி மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுபவர். இதனால் சர்ச்சையில் சிக்குவதுண்டு.

சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ராதா ரவி. அப்போது, தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜு முதல் சரவணா ஸ்டோர் ஓனர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

வாரிசுகள் எப்போதும் வருவார்கள். பாருங்க.. அரசியல்ல வருவாங்க.. ஹோட்டல்ல வருவாங்க.. பாருங்க சரவணா ஸ்டோர்ஸ்லயும் வர்றாங்க..

அவன் ஆடும் போதே நெனச்சேன் சினிமாக்கு வரப்போறானு.. வந்துட்டான்.. சினிமா கெட்டுப் போச்சு… என்ன செய்யறது. சரி இத உடுங்க..

அப்றோன் இத ஹெட்டிங்கா போட்டுருவாங்க.. இந்த இண்டர்நெட் ஆளுங்க இருக்காங்கள்ல்ல.. அய்யோய்யோய்யோ…” இவ்வாறு பேசினார்.