சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சமில்லாதவர் ராதாரவி. நடிகர் சங்க தேர்தலுக்கு பின் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஒவ்வொருமுறை மேடையில் பேசும் போதும் சர்ச்சையான கருத்துகளை முன்வைப்பார். நேற்று இறைவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதிகம் படித்தவை:  பிஜேபியின் மெர்சல் பிரச்சனை ஏன்? விளாசிய பிரபல நடிகர்

இதில் புதிய தொகுப்பாளினி ஒருவர் மூன்று நாயகர், நாயகிகள் பெயரை சொன்னவர் மற்றும் பலர் என்று தெரிவித்துவிட்டார்.

இதனால் கொந்தளித்த ராதாரவி, நான் 300 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன், எம்.ஆர் ராதாவின் மகன். 42 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன்.

அதிகம் படித்தவை:  சரத்குமார், ராதாரவி மீது ஐகோர்ட்டில் நாசர் வழக்கு

ஆனால் என்னை யாரோ ஒருவர் போல் இந்த பெண் அழைத்து விட்டார். இந்த பெண்ணையெல்லாம் வச்சு என்ன பண்றது என்று பேசும் போது அந்த தொகுப்பாளினியை வெளுத்து வாங்கிவிட்டார்.