fbpx
Connect with us

என்னோட இந்த ஆசையை அஜித் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ்- உருகும் மீனாட்சி

News / செய்திகள்

என்னோட இந்த ஆசையை அஜித் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ்- உருகும் மீனாட்சி

rachitha_ajithவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து வரும் ரக்ஷிதா, சொந்த பெயரை காட்டிலும் மீனாட்சி என்ற பெயரில்தான் பிரபலம் அடைந்துள்ளார். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் ஆசையில் ‘உப்புக்கருவாடு’ என்ற படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், பெரிய திரையில் இருந்து வேறு எந்த வாய்ப்பும் வரவில்லை.

இந்நிலையில் மீண்டும் எப்படியாவது பெரிய திரையில் நுழைய ரக்ஷிதா முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக அஜித்துக்கு தங்கை கேரக்டரில் நடிக்க தனக்கு மிகவும் ஆசை என்றும் தன்னுடைய ஆசையை யாராவது அஜித் காதில் போடுங்கள் என்றும் திரையுலகை சேர்ந்த நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.

திரையுலகில் நுழைய வேண்டுமானால் அஜித் அல்லது விஜய்யை வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டால், அது பெரிதாக பற்றிக்கொள்ளும். ரக்ஷிதான் ஆசை அனேகமாக இதற்குள் அஜித்துக்கு போய் சேர்ந்திருக்கும் என நம்புவோம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top