திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

மூக்குத்தி அம்மனை ஓரம்கட்டிய சரவணன் மீனாட்சி ரக்ஷிதா.. அம்மன் கெட்டப்பில் அலறவிடும் லேட்டஸ்ட் புகைப்படம்

நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நயன்தாராவின் அம்மன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

அம்மன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அம்மன் கெட்டப் அவருக்கு நச்சென பொருந்தியிருந்தது. தற்போது அதே கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சித்தா மகாலட்சுமி. சினிமாவில் நயன்தாரா ரேஞ்சுக்கு சின்னத்திரையில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் அவர் சினிமாவில் நடிக்க மாட்டாரா என பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் திருமணம் ஆகிவிட்டதாலோ என்னமோ சினிமாவில் விருப்பம் காட்டாமல் தொடர்பு சீரியலில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ரச்சித்தா மகாலட்சுமி. இந்நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் அம்மன் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் அம்மன் கதாபாத்திரத்தில் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துள்ளார். அந்த வீடியோவை கூட சமீபத்தில் கலர்ஸ் தொலைக்காட்சி தங்களுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டது.

rachita-amman-getup
rachita-amman-getup

நயன்தாராவைப் போலவே ரச்சித்தா மகாலட்சுமிக்கும் அம்மன் வேடம் பொருத்தமாக இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படி ஒரு அழகான அம்மனை இதற்கு முன்னாடி பார்த்ததில்லை என அம்மனையே சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் நம் ரசிகர்கள்.

- Advertisement -

Trending News