Connect with us
Cinemapettai

Cinemapettai

rakshitha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பா வயது நடிகருடன் சினிமாவில் அறிமுகமாகும் சரவணன் மீனாட்சி ரட்சிதா.. அடக் கொடுமையே!

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு மிகப்பெரிய வரவேற்புகளும் பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. அந்த வகையில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்றோரைச் சொல்லலாம்.

ஆனால் சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமான நடிகையாக இருந்து இவர் சினிமாவுக்கு வர மாட்டாரா என ஏங்க வைத்த நடிகைதான் ரச்சித்தா மகாலட்சுமி.

சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நாயகியாக நடித்த ரச்சித்தா மகாலட்சுமி விரைவில் கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். அந்தப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

பார்ப்பதற்கு ரட்சிதா மகாலட்சுமிக்கு அப்பா போலிருக்கும் நடிகருடன் அறிமுகமாக இருக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இல்லாத ஹீரோக்களா, அல்லது கன்னட சினிமாவில் வேறு நல்ல ஹீரோ தான் இல்லையா என அவரைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஒரு காலத்தில் கன்னட சினிமா கிண்டலடிக்கபட்டாலும் தற்சமயம் இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் திரையுலகாக உருவெடுத்துள்ளது. மேலும் கன்னட சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது இந்திய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ரச்சித்தா மகாலட்சுமி தமிழ் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் தேடி வந்தது. அதையெல்லாம் விட்டுவிட்டு இப்படி ஒரு ஹீரோவுடன் ஜோடி போடுகிறார் என கவலையில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள்.

rachitha-debut-movie

rachitha-debut-movie

Continue Reading
To Top