11 வது சீசன் ஐபில் போட்டிகள் நாளை துவங்குகிறது. 8 அணிகளும் முழுவீச்சுடன் தயாராகிவருகின்றனர். ஆரம்பிக்கப்ட்ட முதல் சீசனில் இருந்தே இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கிய ங்களில் டெல்லி ட்ரெடெவில்சும் ஒன்று.

சிறிய இடைவெளிக்கு பின் கொல்கத்தாவில் விளையாடி கவுதம் கம்பிர் மீண்டும் டெல்லி அணியில் இணைந்துள்ளார். மேலும் கேப்டனும் அவர் தான். தலைமை கோச் பணியை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் கவனிக்கிறார்.

DD

ஏலம் ஆரம்பிக்கும் முன்பே இந்த அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், மற்றும் இந்தியாவின் இளம் வீரர்கள் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிசப் பண்ட் ஆகியோரை தக்கவைத்து. ஏலத்தில் கூட விஜய் ஷங்கர் , மஞ்சோத் கலரா, குர்கீரத் சிங், போன்றவர்களை எடுத்துள்ளார்கள்.

காகிஸோ ரபாடா

Kagiso-Rabada-dd

இந்நிலையில் முதுகு வழியால் அவதிப்படும் காரணத்தால் தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா ஐபில் தொடரில் இருந்து விலகியுள்ளார்.  இவரை 4.2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து டெல்லி அணி. இன்னமும் மாற்று வீரர் யார் என்று முடிவாகவில்லை.

மூன்று மாதத்திற்கு ஓய்வில் இருப்பாராம் அவர். டெஸ்ட் ராக்கிங் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ள இவர், பேட்டிங்கும் சேயும் திறன் உடையவர். இவரின் இழப்பு டெல்லி அணிக்கும் பெருத்த நஷ்டமே.