120 கோடி வசூலை அள்ளிய மொட்ட தல ராயன்.. ஓடிடியிலும் பட்டையை கிளப்ப வரும் ரிலீஸ் தேதி இதுதான்

Raayan: தனுஷ் இயக்கி நடித்த அவருடைய ஐம்பதாவது படமான ராயன் சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ட்ரெண்டான நிலையில் இப்போது சோசியல் மீடியா முழுவதும் உசுரே நீதானே பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் வாட்டர் பாக்கெட் பாடல் குழந்தைகள் வரை குத்தாட்டம் போட வைத்துள்ளது.

படத்தில் வன்முறை கொஞ்சம் தூக்கலாக இருந்த போதிலும் தனுஷ் இயக்குனராக ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனாலயே இப்படம் தற்போது வரை 122 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது.

122 கோடிகளை தட்டி தூக்கிய தனுஷ்

இதன் மூலம் இயக்குனர் தனுஷ் 100 கோடி கிளப்பில் இணைந்து விட்டார் என அவரின் ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர். இப்படி தியேட்டர்களில் திருவிழா போல் கொண்டாடப்பட்ட ராயன் விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கிறது.

பொதுவாக தியேட்டரில் வெளியான படங்கள் நான்கு வாரம் அதாவது 28 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் ராயன் அக்டோபர் 30ஆம் தேதி ஓடி டியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதால் இப்படம் அவர்களின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட்டில் வெளியாகும். அதே சமயம் அமேசான் பிரைம் தளமும் இப்படத்தை வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. அதன் படி ராயன் இரு ஓடிடி தளத்திலும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கடந்த மாதம் வெளிவந்த கமல், ஷங்கர் கூட்டணியின் இந்தியன் 2 தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதை தொடர்ந்து இன்று அப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டலுக்கு வர தயாராகும் ராயன்

Next Story

- Advertisement -