விஷ்ணு விஷால்

கதாநாயகன் படத்திற்கு பிறகு விஷ்ணு ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஜகஜால கில்லாடி’ , ‘ராட்சசன்’ என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராட்சசன் படத்தில் போலீசாக நடிக்கிறார்.விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். மேலும் முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமாருடன் மீண்டும் இணைந்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Raatchasan Vishnu Vishal

சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் இப்படம் ரெடியாகிறது. ஜிப்ரான் இசையமைத்து வரும் இதற்கு பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று இசை அமைப்பாளர் ஜிப்ரான் தன் ட்விட்டரில் இப்படத்தை பற்றிய ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

Working on #Raatchasan Film score and it’s becoming one of the toughest films I have scored, Very psychologically intriguing!!! A powerful film and I am extremely happy with the way the film and music are turning out. Thanks to God! pic.twitter.com/LwfZ8ziqQr

— Ghibran (@GhibranOfficial) March 19, 2018

“ராட்சசன் படத்திற்கு பின்னணி இசையமைத்து வருகிறேன். இதுவரை நான் இசையமைத்த படங்களிலேயே, மிகக் கடினமானது. புதிர் அதிகம் உள்ள படம். எனினும் படமும் இசையும் நன்றாக வந்துள்ளது. இறைவனுக்கு நன்றி.”

சினிமாபேட்டை கிசு கிசு

பின்னர் என்ன நினைத்தாரோ மனிதர் படப்பிடிப்பனை ரத்து செய்துவிட்டு சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு ட்வீட் எதாவது ஏடாகூட பின்விளைவை ஏற்படுத்துமா என நினைத்தவர், அதனை டெலீட் செய்துவிட்டார்.

ராட்சசன் என்று பட தலைப்பு வைத்துவிட்டு பின்னர் இப்படி பயப்படலாமா ஜிப்ரான் ?