Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராட்சசன் ஹிந்தி ரீ- மேக் உரிமையை கைப்பற்றியது யார் தெரியுமா ?
ராட்சசன்
முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் குமார் விஷ்ணு விஷால் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் . தமிழ் சினிமாவில் சைக்கோ ஜானர் படங்களில் டாப் இடத்தை இப்படம் பெற்றுவிட்டது. இப்படத்தை அக்சஸ் பிலிம்ஸ் மற்றும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஜிப்ரான் இசை.

Ratchasan
சினிமா ஆசையை துறந்து, குடும்ப சூழலின் காரணமாக போலீசில் சேரும் நம் ஹீரோ, பள்ளி பெண்களை தேர்ந்தெடுத்து கொலை செய்யும் வில்லன். இந்த இருவருக்கும் மத்தியில் நடக்கும் உணர்ச்சி போராட்டத்தை மிக அழகாக காட்டியிருப்பார் இயக்குனர்.
இந்தியாவில் பிற மொழிகளில் என்பதை தாண்டி ஹாலிவுட்டில் ரிமேக் செய்தால் கூட படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரிமேக் உரிமையை தானே கை பற்றியுள்ளதாக விஷ்ணு தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Hi all..the news is true ..i was so confident of #Ratsasan that i got the HINDI remake rights of my film even before release 🙂 thnx to my producer @Dili_AFF @dinesh_WM n @tridentartsoffl Ravi sir 🙂 ? thnk u to d person on twit who did this drawing for d mov 🙂 pic.twitter.com/NKcuEW2SLk
— VISHNUU VISHAL – VV (@vishnuuvishal) October 11, 2018
இவரே நடிப்பாரா அல்லது தயாரிப்பாரா அல்லது நல்ல விலை கிடைத்தால் விற்பாரா என்று பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
