Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தவங்கள கஷ்டப்படுத்தி பார்க்கிறதுதான் ராசி கண்ணாவுக்கு டைம் பாஸ்.. சர்ச்சையை கிளப்பும் பிட்டு நாயகி
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தற்போது பிரபல நாயகியாக வலம் வருபவர் ராசி கண்ணா(raashi khanna). முன்னணி நாயகியாக இல்லை என்றாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தற்போது அடுத்ததாக சூர்யா நடிக்கும் அருவா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
அடுத்தது தளபதி விஜய்க்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ராம்கோபால் வர்மா படத்தில் கில்மா நடிகையாக வலம்வந்த ஸ்ரீ ரபாகா என்ற நடிகை ராசி கண்ணாவை பற்றி கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு தெலுங்கு படத்தின் பாடல் காட்சிக்காக விடியற்காலை சூட்டிங்கிற்கு புடவை கட்டி விடுமாறு வர சொல்லி தன்னை நீண்ட நேரம் காக்க வைத்து விட்டதாகவும், அங்கிருந்த டான்ஸ் மாஸ்டர் இதற்காக நீண்ட தூரம் எதற்கு வந்தீர்கள் என திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
புடவை கட்டுவதற்கு இங்க ஆளே இல்லையா என இவரை திட்டி விட்டாராம். அது மட்டுமில்லாமல் பல முறை இதேபோல் ராசி கண்ணா அவரை காக்க வைத்து கழட்டிவிட்டு உள்ளாராம்.
இந்த செய்தியை கேட்டு சினிமா வட்டாரமே ராசி கண்ணா இப்படிப்பட்டவரா என ஆச்சரியமாக பார்த்து வருகிறது.
