Connect with us

Cinemapettai

ராய் லக்ஷ்மி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சிண்ட்ரெல்லா மோஷன் போஸ்டர். பியுட்டி பாதி ஹாரர் மீதி.

Videos | வீடியோக்கள்

ராய் லக்ஷ்மி பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சிண்ட்ரெல்லா மோஷன் போஸ்டர். பியுட்டி பாதி ஹாரர் மீதி.

ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். கன்னடத்தில் ‘ஜான்சி’ (போலீஸ்) , தமிழில் நீயா 2 (பெண் நாகம்) , ரிலீசுக்கு ரெடி ஆகி வருகின்றது. மேலும் சிண்ட்ரெல்லா என்ற படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர். மேலும் இசை படத்தை தயாரித்த எஸ் எஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் வகையில் கதை.

இன்று தனது 32 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இப்படக்குழு மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளது.

மூன்று ரோல்களில் நடிக்கிறார் லட்சுமி ராய். அதில் ஒன்று பெண் இசையமைப்பாளர் வேடம்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top