2004ல் தீபக் ஷிவ்தாசானி இயக்கத்தில், வெளிவந்து ஹிட் ஆன படம் ஜூலி. அதன் இரண்டாம் பாகத்தை ராய் லக்ஷ்மியை வைத்து ஜூலி 2 என்ற பெயரில் எடுத்துள்ளார் இயக்குனர். அக்டோபர் 6 படம் ரிலீசாக உள்ளது.

இப்படம் சினிமா நடிகையின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுவது போல் எடுக்கப்பட்டுள்ளது. இது ராய் லக்ஷ்மியின் 50 வது படம். இதுவரை பாலிவுட்டில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்து வந்தவர், கதாநாயகியாக நடித்திருக்கும் முதல் படம் இது.

இதில் அவர் கதாபாத்திரம் பற்றி கூறியது, ” இந்த படத்தில் முதல் பாதியில் நடிக்க 10-11 கிலோ எடையை குறைத்தேன். இப்படத்தில் 96 விதமான உடைகள் அணிந்து நடித்துள்ளேன்.” என்றார்.

இப்படத்தில் படுக்கை அரை காட்சிகள், ஆபாசமான வார்த்தைகள் ,மிகவும் கவர்ச்சியான உடையின் காரணத்தால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜூலி 2  ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகப்போகிறது.