Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் ஸ்டைலில் எதுகை மோனையாக வாழ்த்து சொல்லிய பார்த்திபன். சிறப்பு நன்றிகளை பகிர்ந்த இந்தியன் 2 ஷங்கர்.
இந்தியன் 2
ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் – கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில் இணைந்துள்ளார். பொங்கலை முன்னிட்டு, முதல் லுக் போஸ்டர் வெளியானது. பூஜையுடன் 18 ஆம் தேதி ஷூட்டிங் துவங்கியது.

Indian 2
லைக்கா நிறுவனம் தயாரிப்பில், கமலுடன் – காஜல் ஜோடி. அனிருத் இசை . ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லக்ஷ்மி சரவணகுமார் எழுதுகின்றனர். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் நம் பீட்டர் ஹெய்ன் அவர்களும் ஸ்டண்ட் பணிகளை கவனிக்கிறார்.

Indian 2
Best of luck for Indian 2 @shankarshanmugh @ikamalhaasan sirs! First look semma ! Lovely throw bk of our beloved Indian 1. This movie is the need of the hour n this is what we have been waiting !!
— Vivekh actor (@Actor_Vivek) January 18, 2019
முதல் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் துவங்கியதற்கு விவேக் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ரா . பார்த்திபன்

அதே போல இயக்குனர் பார்த்திபனும், இது பர்ஸ்ட் லுக் அல்ல பெஸ்ட் லுக் . ஆல் தி பெஸ்ட் என பதிவிட்டுள்ளார்.
?சிறப்பு!..நன்றி திரு.பார்த்திபன்? https://t.co/rGfu3nMXef
— Shankar Shanmugham (@shankarshanmugh) January 24, 2019
