Tamil Cinema News | சினிமா செய்திகள்
வரும் காலங்களில் உங்களின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை- ரா பார்த்திபனின் அதிரடி ட்வீட்
சமீபத்தில் விகடன் விருதுகள் நிகழ்ச்சி நத்தம்பாக்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 150 க்கு மேற்பட்ட நாமினேஷன், கிட்டத்தட்ட 33 விருதுகள் வழங்கப்பட்டது.
கோமாளி, பிகில், விஸ்வாசம், கேடி என்கிற கருப்பு துறை போன்ற பல படங்கள் விருதுகளை பெற்றது. அதே சமயத்தில் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் எந்த விருதையும் பெறவில்லை. எனவே தான் தன் ஏமாற்றத்தை மறைக்காமல், மனிதில் உள்ளதை ஸ்டேட்டஸ் ஆக தட்டியுள்ளார் பார்த்திபன்.
2தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப்போவதில்லை. வாழ்நாள் சாதனையாளர் விருதாக உங்கள் கௌரவத்தை ஏற்றுக்கொள்கிறேன்!அமைதி யாக திரும்பி விட்டே pic.twitter.com/pdhld19H0g
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 11, 2020
