“தமிழ் சினிமா ஹீரோக்களும், அவர்களின் அரசியல் ஆசைகளும்! ” என்ற பெயரில் ஒரு தொடர்கதையே எழுதலாம். அன்றும், இன்றும், என்றும் தமிழக ஹீரோக்கள் அரசியல் ஆசையுடன் இருப்பதென்பது சாதாரண விஷயம்.

ஒரு புறம் கமலஹாசன் சமூக பிரச்சனை, அரசியல் சலசலப்பு பற்று தன் ட்விட்டரில் பதிவிடுவார். புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். பல நேரங்களில் அவரின் ட்வீட் என்னவென்று நமக்கு புரிவதே இல்லை.

மறுபுறம் ரஜினிகாந்த் நமது அரசியல் சரியில்லை என்று கூறுகிறார். தேவைப்படும் போது அரசியல் களத்தில் இறங்குவேன் என்றும் சொல்லிவருகிறார். ஆனால் இதையே தான் பல ஆண்டுகளாக சொல்கிறார் .

Vishal – Mgr Statue

இந்த சூழலில் தான் நடிகர் விஷால் திடீர் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.ஆனால் அவருடைய வேட்பு மனு ஏற்கப்படவில்லை. விஷால் மனு ஏற்கப்படாததற்கு அரசியல் தலையீடுதான் காரணம்.

Ra Parthiban

இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகரான ரா .பார்த்திபன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் அந்த டீவீட்டில் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தால் என்ன நிலை ஆகும் என்று அவர் சொன்ன வாசகமும் உள்ளது.

அதிகம் படித்தவை:  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முன்னணி நட்சத்திரங்கள்
Sir Winston Churchill’s Words

“இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ரவுடிகள், முறைகேடானவர்கள் கையில் அதிகாரம் செல்லும். மிகவும் கீழ்தரமானவர்கள் தான் அரசியல் புரிவார்கள். நா இனிக்க பேசுவார்கள், ஆனால் மனதளவில் அல்பமானவர்கள். அவர்களுக்குள் சண்டை இடுவர். ஒரு நாள் காற்றுக்கு மற்றும் தண்ணீருக்கு கூட வரி விதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும்.”

நம் பாரத நாட்டுக்கு சுதந்திரம் வழங்கும் பொழுது இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்து ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதை பற்றியெல்லாம் கவலை படாமல் அரசியல்வாதிகள், கடந்த 64 வருடங்களில் இந்திய மக்களின் வாக்குகளை கூட்டமாக ஏப்பமிடும் காக்கைகளாக மட்டுமே இருக்கிறார்கள் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  காதல் முத்தம் கொடுத்துவிட்டு ஏமாற்றி ஓடிய ஆரவ்.!, கண் கலங்கி அழும் ஓவியா.!!!

இதற்க்கு முன் கூட தனது ட்விட்டரில் கழுதைகள் கைதானதை வைத்து அரசியல் பிரமுகர்களை வெறுப்பேற்றினார் பார்த்திபன்.

நம் அரசியல்வாதிகள் மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை, வின்ஸ்டன் சர்ச்சில் வார்த்தைகளையும் பொய்யாக்கவில்லை.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இவ்வாறு பார்த்திபன் இந்த மட்டமான அரசியல் வசதிகளுடன் தங்கள் இனத்தை ஒப்பிட்டார் என்று காகங்களுக்கு தெரிய வந்தால், கட்டாயமாக கூட்டமாக பறந்து அவர் வீட்டின் மேல் அமர்ந்து ரோஷத்துடன் “கா.. கா..” வென்று கோஷமிட்டு, பார்த்திபன் அவர்களுக்கு “கா” விட்டு தன் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு பறந்துவிடும்.