சில நாட்களாகவே பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் பார்த்திபனும் பல பிரபலங்களை சந்தித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. இந்நிலையில் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Keerthana Parthiban

சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம் கீர்த்தனா.அக்‌ஷய் ஹிந்தியில்  ‘பீட்சா’ படத்தை  ரீமேக் இயக்கியவர்.

Akshay Akkineni
கீர்த்தனா
Ra.Parthiban – Keerthana

பார்த்திபன் – சீதா தம்பதியின் மகள் தான் கீர்த்தனா.2002’ம் ஆண்டு  இயக்குநர் மணிரத்னமின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். கீர்த்தனா நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்‌ஷனில் கவனம் செலுத்தினார். மணி சாரின் கற்று வெளியிடை படத்தில் உதவியாளராக பணியாற்றினார். விரைவில் இயக்குனர் அவதாரம் எடுப்பர் என்று எதிர்பார்த்த வேலையில் இவர் திருமண அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Sreekar Prasad

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

புதிய பாதைக்கு வாழ்த்துக்கள் கீர்த்தனா !