fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

முத்தையாவை ஒத்தையா விளாசுவார் – வைரலாகுது பார்த்திபனின் கலக்கலான பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முத்தையாவை ஒத்தையா விளாசுவார் – வைரலாகுது பார்த்திபனின் கலக்கலான பதிவு

இலங்கை கிரிக்கெட் டீம்மின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ எனும் பெயரில் திரைப்படமாக ரெடியாகிறது. முரளிதரனாக நடிக்கவிருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீபத்தில் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் காட்சிகள், தன்னார்வலர்கள் என பலரும் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சில நாட்களாகவே விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Thuglaq Darbar

பிரபல இயக்குனரும், நடிகருமான ரா பார்த்திபன், விஜய் சேதுபதி அவர்களுடன் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். பார்த்திபன் தனது பேஸ் புக் பக்கத்தில், விஜய் சேதுபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர் 800 படத்தில் இருந்து விலகி விடுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளியின் சூழல் பந்தை, ஒத்தையா எதிர்கொள்ளும் வி(சய) சேதுபதி… எதிர்ப்புகள்-எதிர்பார்ப்புகளாக bounce ஆகிவரும் பந்தினை லாவகமாக அடித்து boundary-யைத் தாண்டி சிக்சராக விளாசி,(அதாகப்பட்டது தமிழ் உணர்வறிந்து கைவிட்டேன் என)ஆடியன்ஸ் மட்டுமில்லாமல் அம்பையர்ஸையும் cheers girls போல ஆடவைத்து ஆரவாரத்துடன் ‘தமிழ்மக்கள்’ செல்வன்ந்தர் ஆகிவிடும் வியூகமோ?என்பதென் யூகம்!!! (காலங்காத்தால…) நடப்பது நன்மையே.so
நன்மையே நடக்கும் என நம்புவோம்!!!

இவ்வாறு பார்த்திபன் சொல்லியது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. சேது என்ன முடிவு எடுப்பார் என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top