Connect with us

Cinemapettai

பொன்னியின் செல்வன் படத்தில் இணைவது பற்றி போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட பார்த்திபன். ஆனால் என்ன சொல்ல வர்றார் என்று தான் புரியல ..

aayirathil-oruvan2

Cinema News | சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைவது பற்றி போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்ட பார்த்திபன். ஆனால் என்ன சொல்ல வர்றார் என்று தான் புரியல ..

எம்ஜிஆர் முதல் கமல் வரை பல உச்ச நட்சத்திரங்களின் கனவு படம் தான் பொன்னியின் செல்வன். எனினும் இதுவரை பலரும் படமாக்க முயற்சி செய்தனர்,  ஆனால் சாத்தியம் ஆகவில்லை.

இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் எடுக்க வேண்டும் என்பது கனவு. அந்த வகையில் ‘பொன்னியின் செல்வன்’ ஆரம்பிக்கும் வேலையில் உள்ளார். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அனுஷ்கா, ஐஸ்வர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் களத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் எந்தளவுக்கு உண்மை என்பதும் தெரியவில்லை . படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் திரு மணிரத்னம் படைப்பில்-என் பங்களிப்பில்-பெருங்களிப்பில் ‘பொன்னியின் செல்வன்’. என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

ஏற்கனவே கார்த்தி தான் வந்தியத்தேவன் என்று கிசு கிசுத்து வந்தனர். இந்நிலையில் பார்த்திபன் அவர்களுக்கு பொருந்தும் கதாபாத்திரம் எனில் அது பெரிய பழுவேட்டயராக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகமொத்தத்தில் மீண்டும் மிரட்ட வருது ஆயிரத்தில் ஒருவன் கூட்டணி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top