Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ISRO விஞ்ஞானி வேடத்தில் மாதவன். வெளியானது “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” ப்ரோமோ வீடியோ.

மேடி

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் மாதவன் நடிக்கிறார் என்பது நாம் அறிந்த விஷயமே. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை காலை 11.33 மணிக்கு வெளியாகும் என மாதவன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஆனந்த மஹாதேவன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிலீஸாவது உறுதியாகி உள்ளது, பிற மொழிகளிலும் டப் செய்ய வாய்ப்புள்ளது.

நம்பி நாராயணன்

திட எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் ஆய்வு நடந்த சமயத்தில், திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். 1994ம் ஆண்டு தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்றதாக மத்திய புலனாய்வுத்துறை இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நம்பி நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது.

nambi rajan

பின்னர் தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல் துறை உயரதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறும், நஷ்டஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். பின்னர் நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு

இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்த புத்தகத்தை தழுவி தான் இப்படம் எடுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top