Connect with us
boomerang-movie

ஐ.பி.எல். குவாலிபையர்-2: மும்பை வெற்றிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

News | செய்திகள்

ஐ.பி.எல். குவாலிபையர்-2: மும்பை வெற்றிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா

பெங்களூர்: ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 108 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது

10வது ஐபிஎல் டி20 தொடர் கிரிக்கெட் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதிச் சுற்றில் புனே அணியும், எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றது.

Qualifier 2: Bumrah-Sharma wreak havoc, KKR struggling at 71/5

தற்போது 2வது தகுதிச் சுற்றுப் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 107 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக ஜாக்கி 28 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 31 ரன்களும் சேர்த்தனர்.

மும்பை அணி சார்பில் கரண் சர்மா 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியுள்ளார். 108 ரன்கள் என்ற எளிய இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புனே அணியை இறுதிப்போட்டியில் எதிர்க்கொள்ளும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top