மும்பை: மும்பை இந்தியன் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

10வது ஐபிஎல் சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முக்கியமான முதலாவது குவாலிபையர் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை, புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Qualifier 1: Pune lose Tripathi, Smith cheaply against Mumbai

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  முத்தக்காட்சி கேட்ட நடிகர்: கதறி அழுத நடிகை!

அதிகபட்சமாக திவாரி 58 ரன்களும், ரகானே 56 ரன்களும் குவித்து அவுட்டாகினர். டோணி 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்கள் எடுத்து அவுட்டாகமால் இருந்தார். மும்பை தரப்பில் மெக்லகன், மலிங்கா, கரண் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இதன்பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் மட்டும் 40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  நடிகர், பாடகர், பாடலாசிரியர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்பதையும் நிருபித்த தனுஷ்

இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் புனே சூப்பர்ஜயண்ட் அணி நுழைந்து அசத்தியுள்ளது. அபாரமாக பந்துவீசிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.