fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புத்தம் புதுக் காலை விடியாதா – வைரலாகும் டிரைலர்.. அமேசானில் அமோக வரவேற்பு

putham pudhu kaalai vidiyaadhaa

Videos | வீடியோக்கள்

புத்தம் புதுக் காலை விடியாதா – வைரலாகும் டிரைலர்.. அமேசானில் அமோக வரவேற்பு

கொரோனா தொடரின் முதல் அலையின் போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட தமிழ் ஆன்டாலஜி வலைத் திரைப்படமாக வெளியானது புத்தம் புது காளை. தற்போது இதன் இரண்டாம் பாகமான புத்தம் புதுக் காலை விடியாதா வரவிருக்கிறது.
புத்தம் புது காளை தொடர் லாக்டவுனின் ஆரம்ப கட்டங்களைத் தழுவி, குடும்பங்களுடனான பந்தத்தை மீண்டும் கண்டுபிடித்தார்கள் என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.

தற்போது இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் கொரனோ இரண்டாம் அலைக்கு பிறகு தொற்றுநோய்களின் மத்தியில் இயல்புநிலையைக் கண்டறிந்து அமைதியாக தங்கள் வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. புத்தம் புது காலை விடியாதா தொடர் ஜனவரி 14ஆம் தேதி அமேசான் பிரைமில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இத்தொடர் 5 அத்தியாயங்களை உள்ளடக்கியது. முககவச உத்தம், லோனர்ஸ், மௌன பார்வை, நிழல் தரும் இடம், தி மாஸ்க் ஆகி எபிசோடுகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இத்தொடர் இரண்டாவது லாக்டவுனின் போது அமைக்கப்பட்ட நட்பு, காதல், நம்பிக்கை, பின்னடைவு மற்றும் மனிதநேயம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்கிறது. முதலாவதாக எபிசோட் ஆக முககவச முத்தம் எபிசோடில் காதலை அடிப்படையாகக் கொண்டு கௌரி கிஷன் மற்றும் டீஜே அருணாசலம் இருவரும் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இயக்கத்தில் முககவச முத்தம் கதை உருவாகியுள்ளது. போலீசாக இருக்கும் கெளரி மற்றும் டிஜே இடையே ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மௌனமே பார்வை எபிசோடை மதுமிதா இயக்கியிருக்கிறார். இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு நதியா மொய்து மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர். இதில் நதியாவிற்கு கொரோனா டெஸ்ட் எடுத்த தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறார். நதியாவை எப்படி ஜோஜு ஜார்ஜ் பார்த்துக் கொள்கிறார் என்பது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹலிதா ஷமீம் இயக்கிய லோனர்ஸ் என்ற எபிசோடில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு லிஜோமோல் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர். இதில் இருவேறு இடங்களில் இருக்கும் இருவரையும் இணைக்கும் கதை தான் லோனர்ஸ். ரிச்சர்ட் ஆண்டனி இயக்கத்தில் பின்னடைவை அடிப்படையாகக் கொண்ட ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் நிர்மல் பிள்ளை நடித்துள்ள எபிசோட் நிழல் தரும் இடம். கொரோனாவால் நாம் எவ்வளவு பின்னடைவு சந்திக்கின்றோம் என்பதை இக்கதை கொண்டுள்ளது.

சூர்யா கிருஷ்ணா இயக்கிய தி மாஸ்க் படத்தில் நட்பை மையமாக கொண்டு சனந்த் மற்றும் திலிப் சுப்பராயன் நடித்துள்ளனர். இதில் இரண்டு பள்ளிப்பருவ நண்பர்கள் பல வருடங்களுக்குப் பிறகு சந்திப்பது போல் காண்பிக்கப்படுகிறது. முதல் பாகமான புத்தம் புது காளை வெற்றிக்குப் பிறகு புத்தம் புதுக் காலை விடியாதா ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top