Connect with us
Cinemapettai

Cinemapettai

5 முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஒரே படம் OTTயில் ரிலீஸ்.. வயிற்றெரிச்சலில் திரையரங்கு உரிமையாளர்கள்!

ott-directors-movies-cinemapettai-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

5 முன்னணி இயக்குனர்கள் இயக்கிய ஒரே படம் OTTயில் ரிலீஸ்.. வயிற்றெரிச்சலில் திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா  லாக் டவுன் காரணமாக 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் OTTயில் வரிசையாக அடுத்தடுத்த படங்கள் வெளியாகி திரையரங்கு உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.

தற்பொழுது 5 முன்னணி இயக்குனர்கள் ஒன்றிணைந்து இயக்கிய படமான ‘புத்தம் புது காலை’ திரைப்படம் அமேசான் ப்ரைம்-ல் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, கௌதம்மேனன், சுகாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய ஐவரும் இணைந்து ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கி உள்ளார்கள். 

சுதா கொங்கராவின் ‘இளமை இதோ இதோ’, கௌதம் மேனனின் ‘அவனும் நானும்- அவளும் நானும்’, சுபாஷினியின் ‘காபி  எனி ஒன்?’,  ராஜீவ் மேனனின் ‘ரியூனியன்’, கார்த்திக் சுப்புராஜின் ‘மிராக்கிள்’ ஆகிய ஐந்து குறும்படங்ககளின் தொகுப்பாக உருவான ஆந்தாலஜி படம்தான் இந்த ‘புத்தம் புது காலை’.

amazon-tamil-anthology

amazon-tamil-anthology

இந்த திரைப்படத்தை இயக்கிய ஒவ்வொரு இயக்குநரும்  தனித்தனியாக இயக்கிய ஒவ்வொரு படமுமே ஹிட் படம்தான். இவ்வாறு இருக்க ஐவரும் இணைந்து இயக்கிய இந்தப் படம் எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது. 

5 முன்னணி இயக்குனர்கள் இயக்கிய இந்தப் படம், OTT தளத்தின் ரிலீசான மற்ற படங்களுக்கு எல்லாம் போட்டியாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top