திருமணம் ஆனா ஓரிரு வருடத்திலேயே புரிந்து கொள்ளாமல் பிரிந்து செல்கின்றனர் இப்படி இருக்கும் தம்பதிகள் அதிகம், இன்றைய கால கட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது ஒரு கசப்பாக மாறி வறிகிறது என்றே கூறலாம்.காரணம் பல கூறலாம். இருந்தபோதிலும் முன்பெல்லாம் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரு முக்கியத்துவம் , சம்பிரதாயம் அனைத்திலும் மாற்றம் வந்துள்ளது.

அதாவது திருமணம் என்றாலே மிக எளிய ஒன்றாக நினைக்க வைத்துள்ளது இன்றைய தலைமுறையினரை.இன்னும் சொல்ல போனால், திருமணம் நடப்பதற்கு முன் வரை, இனிமையாக பேசி பழக வைக்கும் மன நிலை , திருமணத்திற்கு பின் கசப்பாக மாறி விடுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, வரதட்சணை என இதில் எதாவது ஒரு காரணத்தை சொல்லி, டைவர்ஸ் வாங்கி செல்கின்றனர்.

அதிகம் படித்தவை:  திருமணமானவர்கள் 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!

விவாகரத்து கோருபவர்களுக்கு, இந்து திருமணச் சட்டத்தின் படி, 6 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கி வந்தது. காரணம் இந்த 6 மாத கால அவகாசத்தில் இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை புரிந்துக்கொள்வதற்கும், ஒரு வேளை மனம் மாறினால் மீண்டும் இணைந்து வாழ்வதற்கு வழிவகை செய்கிறது

அதிகம் படித்தவை:  நடுரோட்டில் 10ஆம் வகுப்பு மாணவிகள் செய்த காரியம்!

இந்நிலையில் 8 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த ஒரு தம்பதியினர் விவாகரத்திற்காக உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.கோயல், யூ.யூ.லலித் ஆகியோர், தம்பதிகள் இருவரும் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத போது, 6 மாத கால அவகாசம் அளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டனர்.

மேலும் அவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, கால அவகாசத்தை குறைத்து, விவாகரத்தை 6 மாதத்திற்கு முன்பே வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது