செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளிய புஷ்பா 2.. வசூல் வேட்டையாடும் அல்லு அர்ஜுன்

Pushpa 2 : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் புஷ்பா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்போது புஷ்பா 2 படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சூழலில் இதுவரை தியேட்டர் உரிமம் விற்கப்பட்ட படங்களை காட்டிலும் புஷ்பா 2 அதிக தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது.

மற்ற படங்களின் சாதனையை இந்த படம் முறியடித்து இருக்கிறது. அதாவது தெலுங்கானாவில் தியேட்டர் உரிமம் மட்டும் கிட்டத்தட்ட 220 கோடி. நார்த்தில் 200 கோடி, கர்நாடகாவில் 30 கோடி, தமிழ்நாட்டில் 50 கோடி, கேரளாவில் 20 கோடி மற்றும் வெளிநாட்டுகளில் 150 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

புஷ்பா 2 படம் ரிலீசுக்கு முன்பே பார்த்த லாபம்

மேலும் புஷ்பா 2 படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 275 கோடி கொடுத்து இந்த படத்தை வாங்கி உள்ளது. அடுத்ததாக சேட்டிலைட் உரிமம் மட்டும் கிட்டத்தட்ட 84 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படத்தின் ஆடியோ உரிமம் 67 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஆகையால் இவை அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 660 கோடி ரிலீசுக்கு முன்பே புஷ்பா 2 படம் வியாபாரம் ஆகி இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர் பெரும் தொகையை இப்போது லாபம் பார்த்திருக்கிறார்.

மேலும் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. விரைவில் படத்திற்கான பிரமோஷன் தொடங்க இருக்கின்றனர். மீண்டும் அல்லு அர்ஜுன் வசூல் வேட்டையாட இருக்கிறார்.

- Advertisement -

Trending News