Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் வேதா பட இயக்குனர்கள் தயாரிப்பில் உருவாகும் முதல் படம்

கணவன் மனைவி ஜோடியாக படம் இயக்கி கலக்கியவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. ஓரம் போ ஆட்டோ, வ குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா இவர்கள் இயக்கிய படங்கள். இவர்கள் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளனர்.
வால் வாட்சர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளனர். y not ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு “ஏலே” என தலைப்பு வைத்துள்ளனர்.
சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பூவரசன் பீபி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கும் அடுத்த படம். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வஸ்ர். இசை கபீர் வாசுகி. எடிட்டிங் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா.
அந்த காலத்து சய்க்கிள், ஐஸ், கோலி என சுவரில் ஒரு பெயின்டிங் போல் உள்ளது இதன் முதல் லுக் போஸ்டர். இப்படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது. விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும்.
