அல்போன்ஸ் புத்திரன்

முதல் படம் ‘நேரம்’ தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான படம், கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. இரண்டாவது படம் ‘ப்ரேமம்’ மலையாளத்தில் மட்டும் வெளிவந்தாலும் எல்லா ஸ்டேட்களிலும் கூட்டம் கூட்டமாக ரசிகர்களை தியேட்டர் நோக்கி செல்ல வாய்த்த படம்.

இவர் அடுத்து இயக்கும் படம் பற்றிய அறிவிப்பு இன்னமும் வரவில்லை, ஆனால் இவர் தயரிப்பில் உருவாகும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்து சில மாதம் ஆகிறது.

#Thobama #alphonseputhiran #FLP #FirstLook #Poster #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

தோபாமா

அல்போன்ஸ் புத்திரனின் நெருங்கிய நண்பர் மோசின் காசிம் இயக்கத்தில் ‘நேரம்’, ‘பிரேமம்’ படங்களில் நடித்த சிஜூ வில்சன், ஷரஃபுதின், கிருஷ்ணா ஷங்கர் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவரின் முந்தய இரு படங்களுக்கும் இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

மேலும் இப்படத்திற்கான ஹீரோயின் தேடுதலில் இறங்கியுள்ளேன் . மேக் அப் இல்லாமல், போட்டோ ஷாப் செய்யாமல் உள்ள போட்டோவை மின்னஞ்சல் அனுப்புமாறு கூறியிருந்தார். இந்நிலையில் படத்தில் நடிக்கப்போவது “புன்யா எலிசபெத்” என்றும், நடிகையின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் அல்போன்ஸ்.

Thobama – Punya Elizabeth

இந்த போட்டோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். சாய் பல்லவிக்கு போட்டியாக அடுத்த நாயகியை களம் இறக்கிவிட்டார் என்று குத்தாட்டம் போடுகின்றனர் நம் நெட்டிசன்கள் .