Sports | விளையாட்டு
முரட்டு வீரரை சென்னைக்கு எதிராக களம் இருக்க போகிறது பஞ்சாப்- பௌலர்ஸ் பாவம் அண்ணாச்சி
ஐபிஎல் இல் இன்று பஞ்சாப் கிங்ஸ் 11 மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள டீம்கள்.
சென்னை அணி செம்ம சொதப்பல் மற்றும் படு மோசமான தோல்விகளை சந்தித்து வருகின்றது. மறுபுறத்தில் பஞ்சாப் நன்றாக ஆடி வருகின்றது, எனினும் முக்கிய தருணங்களில் கோட்டை விட மேட்சுகளை தோற்று வருகின்றனர். இரண்டு அணிகளும் ஜெயித்து பாயிண்ட்ஸ் டேபிளில் முன்னேறும் முயற்ச்சியில் இருப்பார்.
பஞ்சாப் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவாக்க வீரராராக இன்று மாயங் அகர்வாலுடன் க்றிஸ் கெயில் இறங்குவர் எனவும், கேப்டன் ராகுல் மூன்றாம் இடத்தில ஆடுவர் என்கின்றனர் வல்லுநர்கள்.

Chris Gayle – KXI Punjab
மேலும் சில போட்டிகளாக சொதப்பி வரும் கருண் நாயருக்கு பதிலாக மந்தீப் சிங் களம் இறங்குவாராம். அதே போல நியூஸிலாந்தில் ஜிம்மி நீஷம் இடத்தில ஆப்கானிஸ்தானின் முஜீப் உர் ரஹ்மான் விளையாடுவார். இவரை டீம்மில் சேர்க்கும் பட்சத்தில் துவக்கத்தில் இவர் வீசுவார், எனவே கடைசி நேரத்தில் ஷமிக்கு கூடுதல் ஓவர் வழங்க அதுவே வழிவகுக்கும்.
உத்தேச பஞ்சாப் 11 – கிரிஸ் கெய்ல், மாயங் அகர்வால், கே எல் ராகுல், நிக்கோலஸ் பூரான், மந்தீப் சிங், சர்பராஸ் கான், கிருஷ்ணப்பா கவுதம் / முருகன் அஸ்வின்/ ஜெகதீசா சுசித், ஷெல்டன் கார்டல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய், முஜிபுர் ரஹ்மான்.
