11-வது சீசன் ஐபில் போட்டி தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று மோதின.

டாஸ்

டாஸ் வென்ற டெல்லி, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்து. டெல்லி அணியில் அதிரடி மாற்றங்களை செய்தார் கம்பிர். ஜேசன் ராயுக்கு பதிலாக ப்ளுங்கெட், விஜய் ஷங்கருக்கு பதிலாக யூ 19 வீரர் ப்ரித்வி ஷா , சாமிக்கு பதிலாக அவேஷ் கான், நதீமுக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம் பிடித்தனர். பஞ்சாப் அணி சார்பில் கெய்லுக்கு பதிலாக மில்லர் சேர்க்கப்பட்டார்.

அசத்தல் பௌலிங்

ராகுல் மற்றும் பின்ச் துவக்க ஆட்டக்காரரர்களாக களம் இறங்கினர். டெல்லி சார்பில் போல்ட், ப்ளுங்கெட் மற்றும் அவேஷ் கான் சிறப்பாக்க பந்துவீசினர். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணமே இருந்தது. அதிகபட்சமாக நாயர் 36 , மில்லர் 26 , ராகுல் 23 ரன்கள் எடுத்தனர். ப்ளுங்கெட் 4 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். மீண்டும் யுவராஜ் சிங் மதியவரிசையில் சொதப்பினார். 17 பாலில் 13 ரன் எடுத்தார். 20 ஓவரில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்து.

delhi_cinemapettai
DD
சேசிங்

ப்ரித்வி ஷாவ் அதிரடி துவக்கத்தை தந்தார். அணியின் ஸ்கோர் 25 ஆக இருக்கும் போது ப்ரித்வி ஷாவ், ராஜ்பூட் வீசிய பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். பஞ்சாப் அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சால் டெல்லி அணியினர் ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க திணறினர். அதன் முறையே கவுதம் கம்பீர்(4 ரன்கள்), மேக்ஸ்வெல் (12 ரன்கள்), ரிஷாப் பாண்ட்(4ரன்கள்) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஷ்ரேயாஸ் ஐயர்
Shreya Iyer

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அவருடன் ராகுல் திவேதியா இணைந்து அணியின் ரன் விகிதத்தை முன்னேற்ற உறுதுணையாக இருந்தார். கடைசி நான்கு ஓவரில் 43 ரன் தேவைப்பட்டது. எனினும் பரிந்தேர் சரண் வீசிய ஓவரில் 15 ரன் எடுத்தனர்.

கேப்டன் கூல்

18 பால் 28 ரன். இரண்டு செட் ஆன பாட்ஸ்மான். இந்நிலையில் முறையே டை, சரண் மற்றும் முஜிபுர் ரஹ்மானுக்கு மட்டுமே ஓவர் இருந்தது. ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் ரஹ்மானிடம் அஸ்வின் பால் தருவார் என்று அனைவரும் நினைத்த நிலையில் பந்தை டையிடம் தந்தார். அவரும் வெறும் 7 ரன் கொடுத்து திவேதியா விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர் அஸ்வின், பின்ச், யுவராஜ், ராகுல் நீண்ட ஆலோசனைக்கு பின் 19 வைத்து ஓவரை சரனிடம் கொடுத்தனர். இதுவரை 3 ஓவரில் 41 ரன் கொடுத்த சரண், அற்புதமாக பந்து வீசி, வெறும் நான்கு ரன் கொடுத்து மிஸ்ரா விக்கெட் எடுத்தார்.

முஜிபுர் ரஹ்மான்
Mujibhur Rahman

கடைசி ஓவர் வீசும் பொறுப்பு 17 வயது இளம் சபின்னரிடம் சென்றது. 6 பாலில் 17 ரன் தேவை என்ற நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் பந்தை எதிர்நோக்கினார். 0 6 0 2 4 என்று ரன் அடித்தார். கடைசி பந்தி 4 அடித்தால் சூப்பர் ஓவர், சீஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், பிஞ்சிடம் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஐயர். தோணி போல் நிதானமாக செஸ் செய்த ஐயர் 57 ரன் எடுத்தார் .

அஸ்வின் பதட்டம் இல்லாமல் பந்துவீச்சாளர்களை கை ஆண்டதே வெற்றிகி வழிவகுத்தது. துவக்கத்தில் அருமையாக வீசிய அன்கிட் ராஜ்புட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 4 ஓவர் 23 ரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.