Connect with us
Cinemapettai

Cinemapettai

கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் சமந்தா பட இயக்குனர்! ஹாலிவுட் தரத்தில் வெளியான பர்ஸ்ட் லுக்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கன்னட சூப்பர் ஸ்டாரை இயக்கும் சமந்தா பட இயக்குனர்! ஹாலிவுட் தரத்தில் வெளியான பர்ஸ்ட் லுக்

புனீத் ராஜ்குமார் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார். இவர் படங்கள் ரிலீஸ் என்றால் அங்கு திருவிழா கொண்டாட்டம் தான். யுவரத்னா சமீபத்தில் வெளியானது, ஜேம்ஸ் என்ற படத்தில் பிரியா ஆனந்த் உடன் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

கன்னட சினிமாவில் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் Hombale Films . ஆனால் இன்று இந்தியா முழுக்க பிரபலம், அதற்கு உபயம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எப் தான். பார்ட் 2 விற்காக உலகமே வைட்டிங். அடுத்ததாக பிரபாஸ் வைத்து பான்- இந்திய படமாக சலார், ஸ்ரீ முரளியுடன் பகீரா என உள்ளது இந்நிறுவனத்தின் படங்களின் லிஸ்ட்.

இவர்களின் ஒன்பதாவது ப்ரொஜெக்ட் தான் “திவித்வா”. இயக்குனர் பவன் குமார் இயக்கும் படம். சமந்தாவின் யூ டர்ன் படத்தின் கதை, திரைக்கதை அமைத்து இயக்கியது இவரே. இவரின் லூசியா படம் தான் சித்தார்த் நடிப்பில் எனக்குள் ஒருவன் என ரிமேக் ஆனது. சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் படம் எடுப்பதில் வித்தகர்.

தனது டிரேட் மார்க் ஸ்டைலில் தான் இப்படத்தை இயக்க உள்ளார். சமஸ்க்ரிதத்தில் திவித்வா என்பதற்கு இரட்டை என்று அர்த்தமாம். ஆதர்ஷ் உருவாக்கிய இந்த போஸ்டர் சமீபத்திய ட்ரெண்டிங். படத்தின் ஒளிப்பதிவை ப்ரீத்தா ஜெயராமன் கவனிக்க, பூர்ண சந்திரா தேஜஸ்வி இசை அமைக்கிறார்.

dvitva

சிகப்பு கலரில் ஹீரோவின் முகம் பல துகள் போல உடைந்த இந்த முதல் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. ஒரு மனிதன் அவனை பற்றிய புரிதல் நோக்கி பயணிப்பது தான் படத்தின் கதை என இயக்குனர் சொல்லியுள்ளார்.

இந்த போஸ்டரும் காப்பி என சொல்லி புனீத் ராஜ்குமாரின் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர் ஒரு சிலர்.

dvitva poster copy cat

இந்த குற்றச்சாட்டு பற்றி இயக்குனரும் நேற்று வீடியோ வெளியிட்டார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top