ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி  பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் புனே அணியும் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை  நடத்தின.

இதில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான தவான் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரரான அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வழக்கத்திற்கு மாறாக இன்றைய ஆட்டத்தில் நிதானமாக விளையாடி 40 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி இரண்டு ஓவரில் ஹென்ரிக்ஸ் மற்றும் ஹூடா ஜோடி 30 ரன்கள் எடுத்து கைகொடுக்க 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த ஹைதராபாத் அணி 176 ரன்கள் எடுத்தது.

அதிகம் படித்தவை:  ’தல’க்காக வருகிறார்களா விஜய்-நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு துவக்க வீரர் ரஹானே 2 ரன்னில் வெளியேறவே புனே அணிக்கு ஆரம்பமே சொதப்பலாக அமைந்தது.

இதனையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் – திருப்பதி கூட்டணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை வலுப்படுத்தியது. ஸ்மித் 27 ரன்களில் வெளியேறினார்.

அதிகம் படித்தவை:  அஜித் விஜய் இந்த விஷயத்தில் ஒண்ணா இருக்காங்க... செம கடுப்பில் தயாரிப்பாளர்!

இதனையடுத்து கூட்டணி சேர்ந்த தோனி – திருப்பதி ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்து கொண்டிருந்த நேரத்தில் 59 ரன்கள் எடுத்திருந்த போது திருப்பதி ரன் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் 10 ரன்னில் வெளியேறினார்.

அடுத்ததாக களமிறங்கிய தோனியுடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி  தன்பங்கை சரியாக செய்தார். கடைசி நேரத்தில் ’தல’ தோனி ருத்ரதாண்டவம் ஆட, புனே அணி, 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தோனி (61), திவாரி (17) அவுட்டாகாமல் இருந்தனர்.