fbpx
Connect with us

புனேவிடம் புஷ்வானமாகியது பெங்களூர் !! மீண்டும் ஹீரோவானார் தோனி

dhoni

புனேவிடம் புஷ்வானமாகியது பெங்களூர் !! மீண்டும் ஹீரோவானார் தோனி

பெங்களூர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் புனே அணி 27  ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும் புனே அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய புனே அணிக்கு ரஹானே 30, திருப்பதி 31 ரன்கள் என சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருப்பினும் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்மித் கூட்டணி பெங்களூரின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினாலும், 28 ரன்களிலும் ஸ்மித் 27 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்வரிசையில் களமிறங்கிய மனோஜ் திவாரியை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த புனே அணி 161 ரன்கள் எடுத்து.

இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கோஹ்லி 28 ரன்களும், டிவில்லியர்ஸ் 29 ரன்கள் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் புனே அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறவே 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 134 ரன்களை  மட்டுமே எடுத்து புனேவிடம் தோல்வியடைந்தது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய போட்டியில் களமிறங்கிய யின் ஒரு சிக்ஸரும், டிவில்லியர்ஸை அவர் ஸ்டெம்பிட் செய்த முறையும் மீதான ஒட்டுமொத்த விமர்சனத்தையும் மறக்கடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top