Tamil Cinema News | சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷை போல, பல்சர் சுனிடம் மாட்டிய நடிகைகள் யார்? யார்? போலீஸ் விசாரணை-நடிகைகள் பதட்டம்!
சுனில்குமார் மலையாள திரையுலக ஹீரோ, ஹீரோக்களுடன் ரொம்ப நெருக்கமாகி இருந்தவர். இவருக்கு வேலையே பணம் புழங்கும் நடிகைகளை கடத்தி, அவர்களிடம் இருந்து மிரட்டி பணம் பறிப்பதுதான்.
நடிகைகள் டிரைவர்களை நட்பாக்கிக் கொண்டு நடிகைகளை கடத்துவதை வழக்கமாக வைத்து இருந்திருக்கிறார் . பணம் தரவில்லை என்றால் அவர்களை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனில் படம் பிடித்து, பணம் கறப்பது இவரது வாடிக்கை.
இவரின் பிடியில் இதுவரை மாட்டிய நடிகைகள் யார் யாரென்று தெரியவில்லை.யாரை மிரட்டினார்? யாரை ஆபாச படம் எடுத்தார் என்பது எல்லாமே அவரின் செல்போனில் உள்ளது என்று சுனிலின் கூட்டாளிகள் சொல்லியுள்ளனர்.
சுனிலோ, அந்த செல்போனை சாக்கடையில் போட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டார்.அதையும் நம்பிய போலீஸ் திருச்சூர் முதல் கொச்சி வரையிலான சாலையில் உள்ள சாக்கடை பூரா தேடியுள்ளனர்.
இது போல கீர்த்தி சுரேஷ் சுனிலால் கடத்தப்பட இருந்தார் என்பதை குடும்ப மானம் போய்விடுமோ என்று வெளியில் சொல்லாமல், இப்போது வெளிப்படுத்தியது போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று போலீஸ் விசாரிக்க ஆரம்பித்ததில் நடிகைகள் சிலர் பதட்டத்தில் உள்ளார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.
https://youtu.be/DlCn-q-e4Zw
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
