விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தவர் பி.டி. செல்வகுமார். இப்படத்தை தொடர்ந்து ஜீவா, ஹன்சிகா நடித்த போக்கிரி ராஜா என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இவர் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார். காசேதான் கடவுளடா என்று தன் புதிய படத்திற்கு பெயரிட்டுள்ளார்.இதுகுறித்து அவர், நாகேஷ் நடித்த காசேதான் கடவுளடா படத்தின் டைட்டிலை ஏ.வி.எம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி படம் இயக்குகிறேன்.

நாகேஷ் படத்தின் கதைக்கும் என் கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பணமே வாழ்க்கை என்று வாழும் சில மனிதர்களின் கதை என்று கூறியுள்ளார்.