vijay

மாறுபட்ட கதைக்களத்தில் பெரிய பொருட்செலவில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புலி. சிம்புதேவன் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, தம்பி ராமைய்யா, சுதீப் என பல நடிகர்கள் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை பாலிவுட்டின் Rishtey Cineplex என்ற பிரபல தொலைக்காட்சி அண்மையில் திரையிட்டிருக்கிறது. BarcIndia என்ற நிறுவனம் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சிகளில் முதல் இடம் பிடிக்கும் நிகழ்ச்சிகள், படம், தொலைக்காட்சி போன்ற விவரங்களை வெளியிடும்.

இவ்வாரம் திரையிடப்பட்ட படங்களில் விஜய்யின் புலி படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, அதுவும் ஹிந்தி படங்களை தாண்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இதோ அந்த விவரம்

Vijay_Puli-TVRising