Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த வருட ஐபிஎல் புஜாரா ஆடுவார்.. எடுக்கப்போகும் டீம் எது தெரியுமா ?

Sports | விளையாட்டு

இந்த வருட ஐபிஎல் புஜாரா ஆடுவார்.. எடுக்கப்போகும் டீம் எது தெரியுமா ?

ராகுல் ட்ராவிடுக்கு அடுத்து இந்தியா டெஸ்ட் அணியில் தடுப்புச்சுவர் போல இருப்பது சேத்தேஸ்வர் புஜாரா. 33 வயதாகிறது, இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் 6,111 ரன்கள் குவித்துள்ளார். அதாவது 13,572 பந்துகள் எதிர்கொண்டுள்ளார். 18 சதம், 27 அரை சதம் உட்பட 206* ரன்கள் இவரின் அதிகபட்சம் ஸ்கோர்.

புஜாராவை டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என அனைவரும் முத்திரை குத்திவிட்டனர். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் டீமக்களில் இவர் ஆடியுள்ளார். புஜாரா குறுகிய பார்மட்டில் பெரிதாக சாதிக்கவில்லை என சொல்வதை விட பெரிதாக தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.

அனால் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் புஜாராவுக்கு டிமாண்ட் இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்கின்றனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் புஜாராவை எடுக்க அதிக வாய்ப்புள்ளதாம். இதற்கு அவர்கள் சில காரணங்களையும் பகிர்கின்றனர்.

ஸ்மித் அவர்களை ரிலீஸ் செய்த ராஜஸ்தான் நிர்வாகம், எளிதில் பட்டலர் அல்லது ஸ்டோக்ஸ் இவர்களில் யாரையாவது கேப்டன் ஆக்கியிருக்கலாம். எனினும் அவர்கள் சஞ்சு சாம்சனிடம் இந்த பொறுப்பை வழங்கியுள்ளனர். ஏனவே சஞ்சுவுக்கு அறிவுரை கூற சீனியர் இந்தியா வீரர் இருப்பது ப்ளஸ் என நிர்வாகம் நினைக்கிறதாம். மேலும் ஒபெநிங் அல்லது நம்பர் 3 பொஷிஷனில் இறங்கி இன்னிங்க்ஸை பலப்படுத்துவார் புஜாரா.

Chateshwar-Pujara-cinemapettai

Chateshwar-Pujara-cinemapettai

அடுத்தது ராஜஸ்தான் சமீபத்தில் இலங்கையின் சங்கக்காரா அவர்களை டைரக்டர் ரோலில் நியமித்துள்ளார். இவரும் புஜாரா போன்ற சீனியர் வீரரை விரும்புவார், மேலும் களத்தில் இளம் வீரர்களை வழிநடத்த நிர்வாகதுக்கு நல்ல உறுதுணையாக புஜாரா இருப்பார் என்பதே பலரின் கருத்து.

யாருக்கு தெரியும் கொல்கத்தா அல்லது பெங்களூரு போன்ற டீம்கள் கூட ஏலத்தில் எடுக்க முயற்சிக்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top