பல கல்யாணம் பண்ணுவேன் உங்களுக்கு என்ன? பதிலடி கொடுத்த புகழ்

vijay-tv-pugazh
vijay-tv-pugazh

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன்னுடைய 6 வருட காதலியான பென்சியை கடந்த வியாழனன்று திருமணம் செய்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வளம் வரும் கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சிரிச்ச போச்சு நிகழ்ச்சிகளின் மூலம் அறிமுகமான புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பயங்கர பேமஸ் ஆனார். இப்போது கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

Also Read: விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை

இவர் கோயம்புத்தூரை சேர்ந்த பென்சி என்பவரை காதலிப்பதாக ஒரு வருடத்திற்கு முன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அதனை தொடர்ந்து இப்போது திருமணமும் நடைபெற்றது. ஆனால் இவருடைய திருமண நாளுக்கு அடுத்த நாளே புகழும் அவரது மனைவியும் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது.

அதில் புகழும், பென்சியும் ஒரு வருடத்திற்கு முன்பே பெரியார் படிப்பகத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார். இப்போது இந்து முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார். இது தான் உங்கள் பெரியார் பகுத்தறிவா என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

Also Read: காதல் மனைவியை கரம் பிடித்த விஜய் டிவி புகழ்.. காட்டுத் தீயாய் பரவும் திருமண புகைப்படங்கள்

புகழ் கடந்த வியாழன் அன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் . பென்சி கிறிஸ்டியன் என்பதால் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மறுபடியும் இப்போது முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து இருக்கிறார்.

இப்போது எல்லா ட்ரோல்களுக்கும் பதில் அளிக்கும் முறையில், என் அப்பாக்காக ஒரு முறை, என் அம்மாக்காக ஒரு முறை, என் மனைவிக்காக ஒரு முறை, மேலும் உங்கள் அன்புக்காக என எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வேன் என்றும், மேலும் நான் இந்தியனாக வாழ விரும்பிகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Also Read: ஹீரோவாக குக் வித் கோமாளி புகழ்.. கலக்கலான டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Advertisement Amazon Prime Banner