fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் படமாகிறதா ?

News | செய்திகள்

அஜித்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் படமாகிறதா ?

ajith-jaiதமிழ் சினிமாவில் இன்றைய காலகட்டத்தில் பல படங்களில் அஜித்தின் பெயரை சொல்லி கைதட்டல் வாங்குகின்றனர். ஆனால் இங்கு அஜித்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஒத்த கதை ஒன்று சினிமாவாகிறதாம்.

அஜீத்தின் அலுவலகம் முன்பு இயங்கிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஒரு விளையாட்டு மைதானம் இருந்தது. அந்த மைதானத்தின் அருகில் தான் பிரபல அமைச்சர் ஒருவரின் வீடும் இருந்தது. இந்த மைதானத்திற்கு தினந்தோறும் சென்று பேட்மிண்டன் விளையாடுவது ஷாலினி அஜித்தின் விருப்பமாம். சமயங்களில் அஜீத்தும் அங்கு மனைவியுடன் விளையாடுவாராம். இந்த ஜோடியை காணவே அங்கு மாலை நேரத்தில் கூட ஆரம்பித்தார்கள் மக்கள்.

இது பொறுக்காத அமைச்சர், ஒரு நாள் அந்த மைதானத்தையே பூட்டி சீல் வைத்துவிட்டாராம். இதே போல உதயம் NH4 இயக்குனர் மணிமாறன் தன் நண்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி புகழ் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், எனது ஊரில் உள்ள நண்பனின் வீட்டருகே ஒரு மைதானம் இருந்தது, அங்கு தான் நாங்கள் தினமும் விளையாடும் இடம், திடிரென்று அந்த இடத்தை ஒரு அரசியல் தலைவர் ஆக்கிரமித்தார். நண்பன் தட்டி கேட்டதற்கு அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்தான், அதை ஒரு வேறு வடிவில் ஒரு அரசியல் கலந்த பொழுதுபோக்கு படமாக எடுத்துள்ளேன் என்றார்.

ஜெய் ஹீரோவாக நடித்துள்ள இந்த புகழ் திரைப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி ரிலீஸாகிறது. வருண் மணியன் தயாரித்துள்ள இப்படத்தை பிரபல ஐங்கரன் நிறுவனம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.

மேலும் ஜெய் ஜோடியாக சுரபி நடித்துள்ள இப்படத்தில் RJ பாலாஜி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top