Connect with us
Cinemapettai

Cinemapettai

pugazh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பட வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் விஜய் டிவி கதவைத் தட்டிய புகழ்.. பிரம்மாண்ட நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு பெற்றதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

தற்போது இதுகுறித்த ப்ரோமோக்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டியாளர்களின் விவரம் குறித்த புரோமோக்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மற்றொரு போட்டியாளர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை அள்ளிய புகழ் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்ற அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.

இவரின் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியான நிலையில் தற்போது வலிமை மற்றும் விஜய் சேதுபதியின் அடுத்த படம் மட்டுமே அவர் கைவசம் இருக்கிறது. இதனால் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் புகழ் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது புகழ் கலந்து கொள்ளும் இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர அவரின் வருங்கால மனைவியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகழ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் இந்த செய்தி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான புரோமோ விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

Continue Reading
To Top