சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட குக் வித் கோமாளி புகழ்.. காரணம் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருப்பவர் புகழ். ஆனால் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனித்திறமை மூலம் ஒரு சில சேட்டைகள் செய்து ரசிகர்களிடம் தனது கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் புகழ் மற்றும் சிவாஜி இவர்கள் இருவருக்கும் இந்த நிகழ்ச்சி மூலம் பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வரும் புகழ் இனிமேல் தொடர்ந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க இருப்பதாகவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களில் இருந்து சற்று விலகுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதற்கு காரணம் படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் மட்டுமே அடுத்தடுத்து படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும் என்பதற்காகத் தான் புகழ் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

simbu-pugazh-at-maanadu
simbu-pugazh-at-maanadu

அதுமட்டுமில்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டுமே புகழ் பங்கேற்று கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News