சாத்தான்குளத்தை மறக்க இப்ப ஜெயப்ரியா.. உடனடி என்கௌன்ட்டர் நடக்காத வரை இது தொடரும்

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா கடத்தி, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஜெயப்ரியா என்ற மகள் உள்ளார். அவர் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று காணாமல் போய்விட்டார், போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு வெகுநேரமாக காணவில்லை என்பதால் போலீசும் தேடலில் இறங்கினார்.

அப்போது வீட்டின் பக்கத்தில் உள்ள கருவேல மரத்தில் கீழ் குழந்தை பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஊர் மக்கள். உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

அந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைத்து குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். 29 வயது ராஜேஷ் இந்த குழந்தையை கற்பழித்து, அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்னும் இரண்டு பேர் மேல் போலீசாருக்கு சந்தேகம் இருப்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றையதினம் ஜெயராஜுக்கு நீதி கிடைத்தது போல் தற்போது ஜெய பிரியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இணையதளத்தில் #JusticeforJayapriya என்ற ஹாஷ் டேக் நம்பர் ஒன்னில் டிரண்டாகி உள்ளது.

சாத்தான்குளத்தை மறக்க இந்த கொலை செய்தி பரவுவதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு உடனடி தூக்கு அல்லது என்கௌன்ட்டர் நடந்தால் இதுபோல தொடருமா?. இப்பொழுது ஜெயப்ரியாவை மறக்க அடுத்து என்ன ரிலீஸ் செய்வார்கள் என்று தெரியவில்லை.