இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்து வட்டிக் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

G N Anbuchezhian

இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குநர் சுசீந்திரன்  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்த அறிக்கை விவாதத்துக்கு உள்ளானது.

suseenthiran

அஜித் பெயரை வைத்து சுசீந்திரன் விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

“ஏன் இதை இப்போது தெரிவிக்கிறீர்கள். அன்புவிடம் நீங்களும் கடன் வாங்கியிருக்கிறீர்களா?” “அஜித்தை வைத்து விளம்பரம் தேடுகிறீர்களா?” என்று சுசீந்திரனைக் குறிப்பிட்டு சிலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்கள்.

 

இதையடுத்து அது பற்றி விளக்கம் அளித்த இயக்குநர் சுசீந்திரன்,

“நடிகர் அஜித்தை வைத்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அன்புச்செழியன் மட்டுமல்ல யாரிடமும் நான் ஒரு ரூபாய்கூட கடன் வாங்கியது இல்லை. அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காகவே அந்த அறிக்கையை வெளியிட்டேன்” என்றார்.